திங்கள், 6 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (13:48 IST)

ஏழுமலையான் தரிசனத்தை தடுத்து நிறுத்தும் சந்திரன் – ஏன்? இதை படிங்க

வருடம்தோறும் ஏற்படும் சந்திர கிரகணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்தை நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி வரும் ஜூலை மாதம் 16ம் தேதி கிரகணம் நடைபெற இருப்பதால் கோவில் நடையை சாத்த போவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெருமாள் கோவில்களிலேயே மிக பழமையானது, பக்தர்கள் அதிகம் வருவதும் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்குதான். இந்நிலையில் வருடாவருடம் கிரகண காலங்களில் கோவில் நடை சாத்தி வைக்கப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஏனென்றால் கிரகண காலத்தின்போது நல்ல தெய்வங்களின் சக்திகள் குறைந்து விடும் எனவும், கிரகணம் முடிந்த பிறகு தெய்வங்களின் சக்திகளை அதிகரிக்க சிறப்பு கால பூஜைகள் செய்வதாகவும் கூறப்படுகிறது.

வரும் ஜூலை 17ம் தேதி நள்ளிரவு 1.31 மணி முதல் அதிகாலை 4.29 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளது. கிரகணம் நடைபெறுவதற்கு 6 மணி நேரம் முன்னால் கோவில் நடை மூடப்படும் என்பதால் 16ம் தேதி இரவு ஏழு மணிக்கே கோவில் மூடப்படும். பிறகு 10 மணிநேரம் கழித்து மறுநாள் அதிகாலை 5 மணிக்குதான் நடை திறக்கப்படும்.

மேலும் இந்த கிரகண நேரத்தில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட எந்த கோவில்களும் திறந்திருக்காது எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே திருப்பதி செல்லும் பக்தர்கள் இதை கணக்கில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும்.