கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதிஸ்வரர் ஆலயத்தில் வருண ஹோமம்

ஆனந்த குமார்|
மழைவேண்டியும், உலக நன்மை வேண்டியும் கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதிஸ்வரர் ஆலயத்தில் வருண ஹோமம், வருண யாகம் நிகழ்ச்சி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தில்., எந்தாண்டும் இல்லாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் அரசும், ஆங்காங்கே தீவிரமாக தண்ணீர் பற்றாக்குறையை போக்கி வருகின்றது. மேலும்,, போதிய மழையில்லாத காரணத்தில் மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தும்  வருகின்றனர். குறிப்பாக சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் தண்ணீர் பஞ்சத்தால் தற்காலிகமாக  மூடிவருகின்றனர். 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்திரவின் பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்த ஆலயங்களிலும் மழை வேண்டியும்,  உலக நன்மை வேண்டியும் வருண யாகம் மற்றும் ஹோமம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில்., அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலை மணிக்கு துவங்கியது. திருமுறைபதிகம் சர்வசாதகத்துடன் நடைபெற்றது இந்த யாகம். இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும்., தமிழக  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆனிலையப்பருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 


இதில் மேலும் படிக்கவும் :