செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By J.Durai
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (15:05 IST)

ஸ்ரீ பெரிய புன மங்கைபால திரிபுரசுந்தரி திருக்கோவில் கும்பாபிஷேக விழா!

Kumbabishekam
சோழவந்தான் அருகே கொடிமங்கலம் கிராமத்தில் உள்ள பாலாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியபுனமங்கை என்ற ஸ்ரீ பாலதிரிபுர சுந்தரிஅம்மன் மகா கும்பாபிஷேக விழா நான்கு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.


 
முதல் நாள் உலக நன்மைக்காக திருவிளக்குபூஜை நடைபெற்று புனித நீர் வழிபாட, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு நடந்தது.

இரண்டாம் நாள் கோ பூஜை நடைபெற்று மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல்,களைஈர்ப்புவழிபாடு நடைபெற்றது.

மூன்றாம் நாள் காலை மங்களம்இசை உடன் இரண்டாம் கால வேள்வி வழிபாடு, மூன்றாம் கால வழிபாடு நடைபெற்று மருந்து சாத்துதல் நடைபெற்றது.

Kumbabishekam

 
நான்காம் நாள் அதிகாலை நான்காம் கால வேள்வி வழிபாடு நடைபெற்று யாகசாலையில் இருந்து நிர்வாகிகள் தலைவர் தங்கவேலு, செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் ரத்தின சபாபதி, துணைத்தலைவர் சந்திரசேகர், செயற்குழு உறுப்பினர் சரவணன் மற்றும் சிவாச்சாரியார்கள் மேளதாளத்துடன் திருக்குடங்கள் எடுத்துக் கோவிலை வலம்வந்தனர்.

திருக்கயிலை சிவபூதக திருக்கூட்டம் திருக்குடந்தை பாலாஜி முன்னிலையில் விமானத்தில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

இதைனை தொடர்ந்து  மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.