1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
  4. aadi amavasai coming in wednesday after twelve years

12 வருடங்களுக்கு பின் இன்று ஒரு சிறப்பான ஆடி அமாவாசை!.. என்ன தெரியுமா?...

amavasai
தமிழர்களின் வாழ்வில் அமாவாசை என்பது ஒரு முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. மறைந்த தங்களின் பெரியோர்களுக்கு அன்று படையல் வைத்து வழிபடுவது தமிழர்களின் பண்பாடு. எனவே கடந்த பல வருடங்களாகவே அது தமிழர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

குறிப்பாக ஆடி மாதம் வரும் அமாவாசை என்பது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதுவும் 12 வருடங்களுக்கு பின் ஆடி அமாவாசை இன்று புதன்கிழமை வந்துள்ளது. இதை விசேஷ நாளாக மக்கள் பார்க்கிறார்கள். ந்

12 ஆண்டுகளுக்கு பின்பு வரும் ஒரு சிறப்புமிக்க மிக முக்கிய பித்ரு வழிபாட்டு நாளாக இன்று பார்க்கப்படுகிறது.
எனவே, இராமேஸ்வரம், கன்னியாகுமாரி மற்றும் காவிரி கரைகளில் மக்கள் கூடி தங்களின் முன்னோர்களுக்கு பல வழிபாட்டு ஸ்தலங்களிலும் திதி கொடுத்து தங்களின் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்தனை செய்து வருகிறார்கள்..

வழிபாட்டு முறைகள்:

காலையில் எழுந்து தலைக்கு குளித்து சுத்தமான ஆடை அணிய வேண்டும்.

நீர்நிலைகளுக்குச் சென்று எள் மற்றும் தண்ணீர் கொண்டு தர்ப்பணம் கொடுக்கலாம்.

முடியாதவர்கள் தங்களின் வீட்டிலேயே தர்ப்பைப் புல் மற்றும் கருப்பு எள் கொண்டு வழிபடலாம்.

சமைத்த உணவை முன்னோர்களுக்குப் படைத்து காகத்திற்கு வைக்க வேண்டும்.

ஏழைகளுக்கு அன்னதானம் அல்லது உதவிகள் செய்யலாம்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஈஷா, கங்கா மருத்துவமனை சார்பில் இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் ..