வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2024 (13:19 IST)

மனைவிக்கு தெரியாமல் எனக்கு ரூ.50 ஆயிரம் அனுப்பினார்: சீமான் குறித்து விஜயலட்சுமி

Vijayalakshmi Seeman
சீமான் தனது மனைவிக்கு தெரியாமல் எனக்கு ஐம்பதாயிரம் ரூபாய் எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பினார் என்றும், அந்த பணம் கொடுத்தது தனது மனைவிக்கு தெரியக்கூடாது, நாம் தமிழர் கட்சிக்கு தெரியக்கூடாது, தமிழகத்திற்கே தெரியக்கூடாது, மீடியாவுக்கு தெரியக்கூடாது என்று என்னிடம் சத்தியம் வாங்கியதாக நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் அந்த வீடியோவில், "மக்கள் உங்களை முதல்வர் ஆக்குவார்கள் என்றெல்லாம் கனவு காண வேண்டாம். முதலில் உண்மை பேசும் யோக்கியதை உங்களுக்கு கிடையாது. உங்களை மாதிரி துரோகிகள் கையில் எல்லாம் தமிழ்நாடு என்றைக்கும் சிக்காது. தமிழ் உணர்வாளர்கள் யாரும் அதற்கு விடமாட்டார்கள். உங்களது முதல்வர் கனவு எல்லாம் இப்போதே விட்டு விடுங்கள். என்னுடைய கண்ணீரை விட, எங்க அக்கா கண்ணீர் என்றைக்கும் உங்களை சும்மா விடாது," என்று தெரிவித்துள்ளார்.

"நான் நல்ல தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்திருக்கிறேன் என்று அடிக்கடி சொல்கிறீர்கள். நாங்கள் எல்லாம் என்ன ஹிந்தி அப்பா அம்மாவுக்கா பிறந்திருக்கிறோம்? நானும் தமிழ் அப்பா அம்மாவுக்கு தான் பிறந்திருக்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Edited by Mahendran