திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (14:45 IST)

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த உதயநிதி!

சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி தினந்தோறும் தனது தொகுதி பகுதிக்குச் சென்று தொகுதி மக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் குறிப்பாக தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்பதில் உதயநிதி தீவிரமாக உள்ளார்
 
இந்த நிலையில் இன்று ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று உதயநிதி ஆய்வு செய்தார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:  ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் Trauma Care பிரிவிற்கான கட்டிட கட்டுமான பணிகளை மாண்புமிகு அமைச்சர் அண்ணன் சேகர்பாபு, அண்ணன் தயாநிதி மாறன் எம்பி ஆகியோருடன் சென்று பார்வையிட்டேன்.
 
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அண்மையில்ஆய்வு செய்தபோது,அங்குள்ள கழிவறைகளை சுகாதாரமாக வைத்திருக்குமாறு  கேட்டுக்கொண்டிருந்தேன். இந்நிலையில் மருத்துவமனைக்கு மீண்டும் இன்று ஆய்வுக்காக சென்றபோது கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என பார்வையிட்டேன்
 
இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.