செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (21:01 IST)

எனது அடுத்த படத்தின் கதை இதுதான்: கிருத்திகா உதயநிதி

கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. அவரது அடுத்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் நாயகனாகவும் தன்யா ரவிச்சந்திரன் நாயகியாகவும் நடிக்க உள்ளார்கள். மேலும் ரிச்சர்ட் எம்.நாதன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏற்கனவே வணக்கம் சென்னை, காளி ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதிக்கு இது மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் கிருத்திகா உதயநிதி தனது மூன்றாவது படத்தின் கதைக்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததாகவும் ஒரு வழியாக சரியான கதையை கிடைத்துவிட்டது என்றும் கூறினார். மேலும் இந்த கதை ஒரு வாழ்வின் பயணத்தை பற்றியது என்றும் பயணம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் ஏற்கனவே தமிழில் பயணம் தொடர்பான கதைகள் வந்துள்ள நிலையில் இந்த படம் வித்தியாசமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது