1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (12:22 IST)

தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணித்தலைவர் பதவி.. ராஜினாமா செய்தார் யுவராஜா

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை யுவராஜா திடீரென ராஜினாமா செய்துள்ளதை அடுத்து ஜிகே வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் யுவராஜாவுக்கு உடன்பாடு இல்லை என்றும் இதனை அடுத்து திடீரென அவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் மூன்று மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத நிலையில் ஜி கே வாசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என யுவராஜா கடிதம் கொடுத்ததாக கூறப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் திடீரென தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் கட்சியில் இருந்து வெளியேறவில்லை என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தான் தொடர்ந்து இருப்பேன் என்றும் கட்சியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இளைஞர் அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள யுவராஜா கட்சியில் தொடர்ந்து நீட்டிப்பாரா? அல்லது அதிமுக அல்லது திமுகவில் சேர்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran