கருப்பு திராவிடன்; கர்வ தமிழன்! – இன்ஸ்டாவில் பதிவிட்ட யுவன் சங்கர் ராஜா!
இளையராஜா பிரதமர் மோடி குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் இட்டுள்ள பதிவு ட்ரெண்டாகி வருகிறது.
பிரதமர் மோடி குறித்த புத்தகமொன்றில் அணிந்துரையில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியிருந்தது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இளையராஜாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக இளையராஜாவுக்கு ஆதரவாக பேசி வருகிறது.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. கடற்கரை பகுதியில் கருப்பு சட்டை, வேஷ்டி அணிந்து நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு “கருப்பு திராவிடன்.. கர்வமான தமிழன்” என பதிவிட்டுள்ளார். தனது தந்தை கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில் யுவனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.