செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 11 மே 2024 (16:45 IST)

மோடி மீண்டும் பிரதமரானால் ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

Stalin Kerjiwal
மோடி மீண்டும் பிரதமர் ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலினை கைது செய்து விடுவார் என்றும் அதற்கான திட்டம் இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லி மதுபான வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறையில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியான நிலையில் இன்று நடந்த பிரம்மாண்டமான பேரணியில் பேசினார் 
 
அப்போது அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் பிரதமர் மோடி கைது செய்வார் என்றும் அவர் மீண்டும் பிரதமர் ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்பட ஒரு சில எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் இந்த தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றால் அடுத்த இரண்டு மாதங்களில் உத்தரப்பிரதேச முதல்வரை மாற்றி விடுவார்கள் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 திருடர்கள் எல்லாம் பாஜக தங்கள் கட்சியில் வைத்துக்கொண்டு நல்லவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள் என்றும் அவர்களால் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும் என்பதை காட்டுவதற்காகவே அதிகாரத்தை பயன்படுத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran