வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 மார்ச் 2024 (17:08 IST)

தூக்குப்போடுவது போல கனவு.. நிஜமாகவே தூக்குப்போட்டுக் கொண்ட +2 மாணவி! – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் கனவில் தூக்கிடுவது போல கனவு வந்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளான மாணவி நிஜமாகவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை மயிலாப்பூர் முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் நாகலெட்சுமி. கணவரை பிரிந்து தனது மகள், மற்றும் மகனுடன் வசித்து வரும் அவர் அப்பகுதியில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரது 17 வயது மகள் அருகில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை நேரத்தில் மாணவி யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து போலீஸார் சம்பவ இடம் சென்று மாணவியின் அறை உள்ளிட்டவற்றை சோதித்ததில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், மாணவி தனக்கு சமீப காலமாக அடிக்கடி தூக்கிட்டு கொள்வது போல கனவுகள் வருவதாகவும், அதனால் தன்னால் இயல்பாக இருக்க முடியவில்லை என்றும், எனவே தான் 3 படத்தில் வருவதை போல தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் எழுதியிருந்ததாக போலீஸார் மூலமாக தெரிய வந்துள்ளது.

மாணவி தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் இதுகுறித்து பல்வேறு கோணங்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K