தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடுத்தடுத்து உயிர்கள் பலி- அன்புமணி ராமதாஸ்
- மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சத்குரு!*
- மூளையில் அறுவை சிகிச்சை..! மருத்துவமனையில் இருந்து சத்குரு டிஸ்சார்ஜ்..!
- 454 நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கப் போகும் ரிஷப் பண்ட்!
- அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வருகிறேன்..! – சத்குரு பேசி வெளியிட்ட வீடியோ!
உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை.. 26 வயது புதுவை இளைஞர் பரிதாப பலி..!
உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்த புதுவையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடல் பருமனை குறைக்க முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் உணவு கட்டுப்பாடு வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்ட நிலையில் சிலர் உடனே உடல் பருமனை குறைக்க வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வருவதாகவும் அதனால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதுவையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பருமனை குறைப்பதற்காக கொழுப்பு சத்தை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்
சிகிச்சை தொடங்கிய சில நிமிடங்களில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிகிறது. உயிரிழந்த இளைஞரின் பெயர் ஹேமச்சந்திரன் என்றும் அவருடைய மறைவு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
