திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (17:25 IST)

மூளையில் அறுவை சிகிச்சை..! மருத்துவமனையில் இருந்து சத்குரு டிஸ்சார்ஜ்..!

Jakki Vasudev
மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சத்குரு டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
 
கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலி இருந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிடி ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது மூளையில், ரத்தகசிவு இருப்பது கண்டறியப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், சத்குரு ஜக்கி வாசுதேவ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 
 
அதன்பிறகு, தாம் நலமுடன் இருப்பதாக ஜக்கி வாசுதேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அவர் செய்தித்தாள் படிக்கும் வீடியோவும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், மூளையில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


மார்ச் 17ஆம் தேதியன்று மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சத்குரு இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.