1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2018 (15:18 IST)

சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வாலிபர்கள் கைது

திருவள்ளூரில் சப்-இன்பெக்டர் தாக்கப்பட்டது குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 
திருவள்ளூரில்  கிருஷ்ணராஜ் என்ற சப் இன்ஸ்பெக்டர் காமராஜர் சிலை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாலை விதிகளை மீறியதாக தெரிகிறது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் இதுகுறித்து விசாரித்தார்.
 
போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் ஒரு கட்டத்தில் திடீரென  கிருஷ்ணராஜை தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் சென்னை சூளைமேட்டை சேர்ந்த சகோதரர்கள் செல்வகுமரன், செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ள போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.