செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (20:06 IST)

முதியவரை தாக்கி செல்போன் பறித்த இளைஞர்கள்....காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சாலையில் நடந்து  சென்ற முதியவரை தாக்கி, மூன்று இளைஞர்கள் அவரிடம் இருந்து செல்போன் பறிக்கும் காட்சி வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் அதிகமாகிவருதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சத்திய மூர்த்தி சாலையில் கடந்த 15 ஆம் தேதி,இரவு 9.45 மணிக்கு  ஒரு முதியவர் சென்றுகொண்டிருந்தார். அவரை நோட்டமிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் மக்கள் நடமாட்டம் அப்பகுதியில் இருந்தும்கூட,  அவரை பலமாக தாக்கிவிட்டு, அவரிடமிருந்த செல்போனை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
 
இந்த சம்பவம் குறித்து போலீஸார் அப்பகுதியில் விசாரித்து வருகின்றதாக தகவல்கள் வெளியாகிறது.