1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (14:40 IST)

செல்ஃபோன் வெடித்ததில் சிதைந்து போன முகம்: இளைஞருக்கு நேர்ந்த துயர சம்பவம்

கிருஷ்ணகிரியில், ஹெல்மெட்டிற்குள் வைத்து செல்ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய இளைஞரின் செல்ஃபோன் வெடித்ததில், அவர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாலையில் செல்ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களை நாம் அன்றாடம் காணமுடியும். இவ்வாறான அலட்சியப்போக்கால் பலரும் விபத்துக்குள்ளாகிறனர். ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையில் ஹெல்மெட்டிற்குள் செல்ஃபோனை வைத்து பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் சென்ற இளைஞர் ஒருவருக்கு, செல்ஃபோன் சூடாகி வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது சொந்த ஊரான புலியூருக்கு மோட்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்ஃபோனில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பிற்கு பதிலளித்து, செல்ஃபோனை ஹெல்மெட்டிற்குள் வைத்து பேசிக்கொண்டே மோட்டர் பைக்கை ஓட்டியுள்ளார். அப்போது திடீரென அவரது செல்ஃபோன் சூடாகி, வெடித்துள்ளது. இதனால் நிலைகுழைந்த அவர் பைக்கிள் இருந்து தடுமாறி விழுந்துள்ளார்.

செல்ஃபோன் வெடித்ததில் முகத்தின் ஒரு பகுதி சிதைந்துபோனது. இதனையடுத்து பொதுமக்கள் அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.