1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 மார்ச் 2018 (13:22 IST)

சொகுசு வாழ்க்கைக்காக அக்காவை தீர்த்து கட்டிய தங்கை

தன் கணவன் மீதான கள்ளத் தொடர்பை விடச் சொன்ன அக்காவை அவரது தங்கையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 





திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவி நதியா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பூபாலன் தன் குடும்பத்தினரோடு திருப்பூர் இடுவம்பாளையத்தில் வசித்து வருகிறார். நதியாவின் சித்தி மகளான ரேகா, நாகராஜ் என்பவருடனான கள்ளத்தொடர்பால், தன் கணவனை பிரிந்து நதியாவின் வீட்டினருகே வாடகைக்கு வீடு எடுத்து நாகராஜுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் அக்கா நதியா வசதியாக இருப்பதை பார்த்து பொறாமை கொண்ட ரேகா, நதியாவின் கணவனான பூபாலனை தனது வளைக்குள் சிக்க வைக்க திட்டமிட்டார். இதனையடுத்து பூபாலனை தன் வளையில் சிக்க வைத்த ரேகா, பூபாலனனோடு பலமுறை படுக்கையை பகிர்ந்து கொண்டார். இந்த காட்சி அங்கிருந்த ஸ்பை கேமராவில் பதிவாகி உள்ளது.
                         நதியா                                                    பூபாலன்
இதனை எதேர்ச்சையாக நதியா பார்க்க நேர்ந்ததது. அதிர்ச்சியடைந்த நதியா, ரேகாவை அழைத்து எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த ரேகா, தனது கள்ளக்காதலனான நாகராஜனை வைத்து நதியாவை தீர்த்துக் கட்டினால் பலி நாகராஜனைப் போய் சேரும். பிறகு பூபாலனோடு நிம்மதியாய் வாழலாம் என மாஸ்டர் பிளான் போட்டார்.
 
இதனையடுத்து நாகராஜை வைத்து நதியாவை கொடூரமாக கொலை செய்தார் ரேகா. நாகராஜ் நதியாவை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு பெங்களூர் தப்பினார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், நதியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருதுவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் கொலை குறித்து விசாரித்து வந்த நிலையில், ரேகாவின் நடவடிக்கை மீது சந்தேகப்பட்டு அவரை விசாரித்தனர். முதலில் ஒன்றும் தெரியாதது போல் பேசிய ரேகா, போலீஸார் தங்களின் பாணியில் விசாரிக்கவே நடந்தவற்றை கூறினார். இதனையடுத்து ரேகாவை கைது செய்த போலீஸார் தலைமறைவாக இருந்த நாகராஜையும் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பணத்திற்காக தங்கை, அக்காவையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.