1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (21:20 IST)

650 கொலை; ஆசிட்டில் உடல் கரைப்பு: கொடூர மனிதன்...

மெக்சிகோவில் ஆள் கடத்தல் முதல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் வரை என அனைத்தையும் செய்யும் கும்பல் ஒன்றிற்காக ஒருவன் சுமார் 650 பேரை கொலை செய்து அவர்களது உடலை ஆசிட்டில் கரைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மெக்சிகோவில் சட்ட விரோதமான செயல்களை செய்யும் கும்பல் ஒன்றிற்காக வேலை செய்து வந்த ஒருவன் இதுவரை 650 பேருக்கும் அதிகமானோரை கொலை செய்து உள்ளானாம்.
 
கொலை செய்யப்பட்டவர்களை கண்டு பிடிக்காமல் இருக்க கொலையானவர்களின் உடலை ஆசிட்டில் கரைப்பதை வழக்கமாக வைத்துள்ளான். இவனது இடத்தில் சுமார் 16,500 லிட்டர் வேதிப்பொருள் மற்றும் 150 - 200 கிலோ மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், உடலை கரைக்க இவனுக்கு ஒரு வாரத்திற்கு 440 பவுண்டுகள் சமபளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். இருப்பினும் குற்றவாளிக்கு இன்னும் தண்டனை கொடுக்கப்படவில்லை. இந்த சம்பவம் மெக்சிகோ நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.