செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (12:50 IST)

கேரளாவில் அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் பணி

கேரளாவில் அரிசி திருடியதாக அடித்த கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளது.
 
கடந்த பிப்ரவரி மாதம் கேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதி பொதுமக்கள் அரிசி திருடியதாக கூறி மது என்ற ஆதிவாசி நபரை அடித்து கொன்றனர்.
 
ஆனால் அரிசி திருடியதாக அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என்று தெரிய வந்ததால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அவர் அடித்து கொல்லப்படுவது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் பார்த்த மக்கள், மதுவை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர். மேலும், கேரள முதல்வர் பினராஜி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.
 
இந்நிலையில், அவரது தங்கை சந்திரிக்கா போலீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அவருக்கு முதல்நிலை பெண் காவலர் பணி கிடைக்கவுள்ளது. அவரது அண்ணன் இறந்த அன்று இவர் போலீஸ் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது.