வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 மார்ச் 2018 (09:12 IST)

அரசின் நடவடிக்கைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பேங்க் மேனேஜர்

வரம்பு மீறி கடன் கொடுத்ததற்காக அரசின் நடவடிக்கையில் மாட்டிக் கொள்வோமோ என பயந்து தனது 5 வயது மகளுடன் தனியார் வங்கி மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிண்டிகேட் வங்கியின் கிளை மேலாளராக இருந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி ஆவுடையம்மாள். இவர் விற்பனை பிரதினிதியாக வேலை பார்த்து வந்தார். இவர்களது 5 வயது மகள் அருகிலிருக்கும் பள்ளியில் படித்து வந்தார். 
 
வரம்பு மீறி கடன் வாங்கிய வழக்கில் பல்வேறு பெரும் புள்ளிகளும், அவர்களுக்கு உதவிய வங்கி ஊழியர்களும் அரசிடம் சிக்கி வருகின்றனர்.
 
அதேபோல் ராமசுப்பிரமணியனும் பல்வேறு தொழிலதிபர்களுக்கு வரம்பு மீறி கடன் கொடுத்துள்ளார். இதனால் அரசிடம் எங்கு மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் இருந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராமசுப்பிரமணியன் தன் வீட்டில், தனது 5 வயது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் வேதனையடைந்த ஆவுடையம்மாள் தற்கொலைக்கு முயற்சித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.