ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 மே 2024 (19:41 IST)

தம்பியின் மாமியாருடன் உல்லாசம்.. அண்ணன் வெட்டிக்கொலை! – திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூரில் தனது மாமியாருடன் தகாத உறவில் இருந்த அண்ணனை தம்பியே வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள கே.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதான சிவக்குமார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இவரது தம்பி தேவேந்திரனும் திருமணமாகி மனைவியுடன் தனியே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தேவேந்திரனின் மாமியாருடன் சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில் சிவக்குமார் அடிக்கடி தேவேந்திரனின் மாமியாரை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் தேவேந்திரனுக்கு தெரிய வந்த நிலையில் அண்ணன் சிவக்குமாரை கண்டித்துள்ளார்.


ஆனால் அதன்பிறகும் சிவக்குமார் தனது கள்ள உறவை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன் நேற்று மதியம் வீட்டின் அருகே மது அருந்திக் கொண்டிருந்த சிவக்குமாரை சில ஆட்களுடன் சென்று பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை தேடி வந்த நிலையில் அவரே பொன்னேரி காவல் நிலையத்தில் சென்று மேற்படி விஷயங்களை சொல்லி சரணடைந்துள்ளார். இந்நிலையில் போலீஸார் தேவேந்திரனுக்கு உதவி செய்த கூட்டாளிகளை தேடி வருகின்றனர். கள்ள உறவால் ஏற்பட்ட கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K