வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 17 டிசம்பர் 2016 (19:16 IST)

இரவில் தூங்கிய இளம்பெண்ணை மாமன் மகன் பாலியல் பலாத்காரம்

இரவில் தூங்கிக்கொண்டிருந்தபோது தன்னை தனது  மாமன் மகன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


 

காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் முருகப்பன் என்பவரது மகள் காளியம்மாள் (22). காளியம்மாள் மணியாரம்பட்டியில் உள்ள மாமா வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி இருந்துள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் அங்கு படுத்திருந்தபோது, மாமன் மகன் கருப்பையா, காளியம்மாளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், கருப்பையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காளியம்மாள் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை தேடி வருகிறார்கள்.