ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (18:26 IST)

குளித்துக் கொண்டே பைக் ஓட்டிய இளைஞர்கள்... வைரல் வீடியோ

வியட்நாம் நாட்டில் இரு இளைஞர்கள் சோப்பு போட்டுக் குளித்துக் கொண்டே பைக்கில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகரான மிஸ்டர் பீன் ஒரு படத்தில்  அலுவலக வேலைக்காக அவசரமாக கிளம்ப வேண்டி, தனது காரில் பல்துலக்கி துணிகளை உடுத்திக் கொண்டு செல்வார். அதுபோல வியட்நாமில் இரு இளைஞர்கள் பைக்கில் தண்ணீர் உள்ள பக்கெட்டில் குளித்தபடி செல்லும் வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.
 
பின்னர், இருவரையும் பிடித்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் லைசென்ஸ் மற்றும்  இன்சூரன்ஸ் இல்லாததைக கண்டுபிடித்து அபராதம் விதித்தனர்.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.