இளம் பெண் பலாத்காரம் ... ஜவுளிக்கடை ஓனர் கைது ....

karthick
Last Modified செவ்வாய், 29 ஜனவரி 2019 (14:12 IST)
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள திருபுவனத்தில் இயங்கி வந்த ஜவுளிக்டையில் ஒரு இளம் பெண் பணியாற்றி வந்தார். அப்பெண்ணை கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 7  ஆம் தேதி அன்று சிலர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனையடுத்து அப்பெண்  கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என கோரி போராட்டங்கள் வலுத்தன.
 
இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, துர்க்கா என்ற இன்ஸ்பெக்டர் இவ்வழக்கை விசாரித்து வந்தார்.
 
அதன் பின்னர் சின்னப்பா, மைதீன் மற்றும் அப்பெண் வேலை பார்த்த கடையின் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
போலீஸார் ஜவுளிக்கடை ஒனர் கார்த்திக் என்பவரை தேடி வந்தனர். அவர் சென்னையில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தற்போது கார்த்திக்கை போலீஸார் கைது செய்து கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :