1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (14:52 IST)

இளம் பெண் மயக்க ஸ்பிரே அடித்து கடத்தல்....

சென்னை வேப்பெரியில் தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் இளம் பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் எமல்டா( 25) என்ற இளம்பெண்  செவந்த்டெ மெட்ரிக் பள்ளியில் கணக்காளராக  பணியாற்றி  வருகிறார்.
 
நேற்று இரவு பணி முடிந்து தன் வீட்டுக்கு செல்ல அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆனால் அதில் அவர் ஏறியதும், ஆட்டோவில் இருந்தவர்கள் அவரது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து அவரை கடத்தி உள்ளனர்.
 
ஆனால் அந்த ஆட்டோவில் இருந்து எமல்டா  குதித்து தப்பித்துள்ளார். இருந்தாலும் அவரது ஹேண்ட் பேக், மொபைல் போன், ஏடிஎம் கார்ட் அந்த ஆட்டோவில் விழுந்துவிட்டது.
 
இந்நிலையில் தன் கடத்தப்பட்ட சம்பவம் குறித்தும் தன் ஹேண்ட் பேக் உள்ளிட்டவைகளை மீட்டுத்த தரவேண்டுமென வேப்பேரி காவல் நிலையத்தில் எமல்ட்ரா புகார் அளித்துள்ளார். 
 
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் பள்ளிக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது.