வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (16:34 IST)

கலெக்டர் அலுவலத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த இளம்பெண்: கணவர் கைவிட்டதால் விபரீத முடிவு..!

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்து விபரீத முடிவு எடுக்க முயற்சித்த இளம்பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினார் 
 
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பாண்டிஸ்வரி என்பவருக்கும் லோகநாதன் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. 
 
இந்த நிலையில் லோகநாதன் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் தனது குழந்தையையும் எடுத்துச் சென்று விட்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து பாண்டீஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் விசாரணை செய்யப்படவில்லை. 
 
இதனால் மனம் வெறுத்த பாண்டீஸ்வரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார். இதனை அடுத்து உடனடியாக அந்த பகுதியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்து அவரிடம் போலீசாரிடம் புகார் அளிக்க வற்புறுத்தினார் 
 
மேலும் அவரது புகாரின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran