ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (14:12 IST)

சிவகாசி அருகேயுள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து....2 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

விருது நகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் மார்டன் என்ற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில், இன்று, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிக்கு வந்த நிலையில்,  , திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொரு நபர் காயமடைந்ததாக கூறப்பட்டது.

தற்போதைய தகவலின்படி, 2 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்  பட்டாசு ஆலைக்குள் யாரும் நுழையா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாட்டு செய்துள்ளனர்.

இந்த வெடிவிபத்து, வெப்பம் காரணமாக அலது உராய்வின் காரணமாக் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறையின கூறியுள்ளனர்.