திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 செப்டம்பர் 2018 (15:03 IST)

கவர்னருக்கு டிப்ஸ் கொடுத்த பா.ம.க வின் மனுவால் பதறிய அதிகாரிகள்

கரூரில் கடந்த 10 ஆண்டுகளாக இன்றுவரை நடைபெற்று கொண்டிருக்கும் மணல் கொள்ளைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்? ரூ 36 ஆயிரம் கோடி அளவிற்கு மணல் கொள்ளை ஏற்பட்டுள்ளதாகவும் ? வேண்டுமென்றால், தொடர்வண்டி கொள்ளைக்கு நாசா போல, ஆற்றின் மணல் கொள்ளைக்கு இஸ்ரோவின் செயற்கை கோள் உதவியை நாடுங்கள் ! கவர்னருக்கு டிப்ஸ் கொடுத்த பா.ம.க வின் மனுவால் பதறிய அதிகாரிகள்



கரூர் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடவூர் நிகழ்ச்சியை முடித்து விட்டு, கரூர் அரசு விருந்தினர் மாளிகையில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது பலதுறைகளின் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  தமிழக கவர்னரிடம் மனுக்கள் கொடுத்தனர். மேலும், இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக, அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் பலர் மனு ஒன்றை கொடுத்தனர்.

கரூர் மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களாக காவிரி, அமராவதி, நொய்யல், நங்காஞ்சியாறு, குடகநாறு ஆகிய நதிகளில் இன்று வரையும், கடந்த 10 ஆண்டுகளாக தொடர் மணல் கொள்ளை நடந்து வருவதாகவும், குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி, அமராவதி ஆற்றின் மணல்கள், வருவாய்த் துறையினர், காவல்துறையினர், இங்குள்ள அமைச்சர் உதவியுடன் கொள்ளை போவதாகவும், இன்று வரை 36 ஆயிரம் கோடி மதிப்பில் வருவாய் இழப்பு எற்பட்டு வருவதாகவும்,

முதல்வர் தயவில் இந்த மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், ஆகையால் தற்போது பதவியில் உள்ள தனி ஒரு நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்றும், அந்த விசாரணைக்கு ஆதாரமாகவும், ஆதாரம் இல்லை என்றால் இஸ்ரோ மூலம் புகைப்படம் வாங்கலாம், ஏனென்றால், கடந்த வருடம் சேலம் டூ சென்னை சென்ற தொடர்வண்டியில் கொள்ளையடிக்கப்பட்ட, கொள்ளையை கண்டுபிடிப்பதற்காக, நாசாவின் உதவியை நாடியது போல, மத்திய அரசின், இஸ்ரோவின் செயற்கை கோளின் பதிவுகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தமிழக அளவில் மட்டுமில்லாமல், இந்திய அளவில் உள்ள அரசியல் வட்டாரங்களிலிலும், ஆட்சியாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி : பி.எம்.கே.பாஸ்கரன் – மாநில துணை பொதுச்செயலாளர் – பாட்டாளி மக்கள் கட்சி

வீடியோவை காண

சி.ஆனந்தகுமார்