நாளைய நம்பிக்கை நீங்கள். நாளைய எதிர்காலம் நீங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்,
"மாணவக் கண்மணிகளுக்கு நான் சொல்வது, அரசு உருவாக்கித் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
படிக்கின்ற காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள்.
நாளைய நம்பிக்கை நீங்கள். நாளைய எதிர்காலம் நீங்கள். உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, இந்த நாடே உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
புத்தகத்தில் உலகைப் படிப்போம், உலகத்தை புத்தகமாய்ப் படிப்போம்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.