வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (13:21 IST)

திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் சேதம்!

திருப்பூர்: காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றி திடீரென பற்றி எரிந்த தீ; பல லட்சம் மதிப்புள்ள பனியன் ஆடைகள் சேதம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தங்கள் கூறுகிறது. 
 
திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக கடைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து  சாம்பலானதுடன் . விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 2 கோடி ரூபாய் வரையிலான ஆடைகள் முற்றிலும் தீயில் அழிந்தது . 
 
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பிரதான பகுதியான  காதர்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஒன்றிணைந்து தற்காலிக கூரைகள் அமைத்து கடைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 9.30 மணியளவில் கடை ஒன்றில் தீ எரிந்துள்ளது. அதிலிருந்து பரவிய தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது . 
 
இதனால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பின்னலாடைகளால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. சுமார் 50 கடைகளுக்கும் பரவிய தீ பயங்கர தீ விபத்தாக மாறியது , சுமார் 8 கோடிரூபாய்க்கு மேலான ஆடைகள் அழிந்துவிட்டதாக கூறபப்டுகிறது . கடைகள் அனைத்தும் எரிந்த நிலையில் , தீய்ணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். 
 
தற்காலிக கடைகளில் பரவியது அருகில் உள்ள கட்டிடங்களில் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன மேற்கொண்டு தீ விபத்து நடந்த பகுதியில் மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தெற்கு தொகுதி எம்எல்ஏ என அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் தீயணைப்பு நடவடிக்கைகளை சம்பவ இடத்திற்கு வந்து விரைவு படுத்தினர் சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். 
 
மின்கசிவு காரணமாக பஜாரில் இருந்த கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக  கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணைக்கு பிறகே தீவிபத்துக்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தீ எரிந்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு உடனடியாக சென்றதால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.