1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (17:24 IST)

ரூ.25 லட்சம்: முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய சியோமி!!

சியோமி நிறுவனம் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. 
 
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக பல் நிறுவனங்களும், சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் நிதி அளித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி தமிழக முதல்வர் நிவாரணத்தில் ரூ.25 லட்சம் நிதியாக அளித்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... 
 
கோவிட் 19 போராட்டத்தில் தமிழ்நாடுடன் நாங்கள் நிற்கிறோம். தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடை அளித்துள்ளோம். சுகாதாரதுறைக்கு 10,000 மாஸ்க் கொடுக்கும் பணியில் உள்ளோம் எனவும் சியோமி தரப்பில் பதிவிடப்பட்டுள்ளது. 
 
இது பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிகளுக்கான ரூ.10 கோடி உறுதிப்பாட்டில் இது ஒரு பகுதியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.