புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 12 மே 2022 (09:10 IST)

உலகத்தரம் ஆகும் எழும்பூர் ரயில் நிலையம்: ரூ.500 கோடியில் சீரமைக்க திட்டம்!

egmore
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத்தரம் ஆக்கும் வகையில் 500 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம் கடந்த 1908ம் ஆண்டு திறக்கப்பட்டது. 11 நடைமேடைகள் உடன் இயங்கி வரும் இந்த ரயில் நிலையத்திலிருந்து தான் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் மெட்ரோ ரயிலும் இதன் வழியாக சென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் எழும்பூர் ரயில் நிலையத்தை 500 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தரமான முறையில் கிடைக்க வழிவகை செய்யப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது