உலகக்கோப்பை கால்பந்து தொடரை கட்டணமின்றி காணலாம் - அமைச்சர் டுவீட்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரின் விரும்பமான விளையாட்டு கால்பந்து. கிளப் விளையாட்டுகளுக்கே டிவியின் முன் உட்காரும் ரசிகர்கள், உலகக் கோப்பை தொடர் என்றால் சும்மார் விடுவார்களா?
அதிலும், இந்தியாவில் கிரிக்கெட்டைப் போல் கால்பந்து ரசிகர்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.
தமிழ் நாட்டிலும் இதன் தாக்கல் அதிகரித்து வருகிறது. தற்போது, கத்தாரில், 22 வது உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் பெருகி வரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தியை தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், தமிழ் நாட்டில் அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS18 சேனலில் கூடுதல் கட்டணமமின்றி உலகக் கோப்பை கால்பாந்து தொடரை கண்டு ரசிக்கலாம் என்று கூறியுள்ளார்.
Edited by Sinoj