சவுக்கு சங்கரை அழைத்து செல்லும் பெண் காவலர்கள்.. இதுதான் தகுந்த பாடம்..!
கோவையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் அழைத்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில், திருச்சி மகிளா நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். இந்த நிலையில் சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, முழுக்க முழுக்க பெண் காவலர்கள் அடங்கிய குழுவை காவல்துறை நியமித்துள்ளது.
பெண் காவலர்களை இழிவாக பேசியவர்களுக்கு, இதைவிட தகுந்த பாடம் புகட்ட முடியாது என ஏற்கனவே காவல்துறை விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேசிய வழக்கில் நீதிமன்ற காவல் இன்று நிறைவு பெறுவதை அடுத்து கோவையிலிருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கர் வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறார்.
அவர் அழைத்துச் செல்லப்படும் வேனில் முழுக்க முழுக்க பெண் காவலர்கள் உள்ளனர் என்பதும் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டினகளும், சவுக்கு சங்கருக்கு சரியான பாடம் புகட்ட காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
பெண் காவலர்கள் மத்தியில் அமைதியாக சவுக்கு சங்கர் உக்காந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Edited by Mahendran