புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinothkumar
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (09:52 IST)

காதலியைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட நபர் – ஒரு மாதத்துக்குப் பின் கைது !

திருவண்ணாமலை பகுதியில் கடந்த மாதம் பச்சக்குப்பம் ரயில்நிலையம் அருகில் பிணமாகக் கிடந்த பெண்ணைக் கொலை செய்தவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்பூர் பச்சக்குப்பம் ரயில்நிலையம் அருகில் கடந்த மாதம்  ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி இளம்பெண் ஒருவரின் சடலம் அரை நிர்வாணக் கோலத்தில் போலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அந்த பெண் யார் என்பது குறித்து நடந்த விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிவரத்தினம் எனக் கண்டறியப்பட்டது.

சிவரத்தினம் கணவரை விவாகரத்து செய்துவிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி பச்சக்குப்பம் ரயில் நிலையத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது நடந்த சண்டையில் ஆத்திரமடைந்த ஏழுமலை சிவரத்தினத்தைத் தாக்கி அவரின் புடவையால் கழுத்தை நெறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றுள்ளார்.

ஒருமாதத்துக்கு பிறகு ஏழுமலையைக் கைது செய்துள்ள போலிஸார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.