வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (20:27 IST)

பெற்றோர் எதிர்ப்பு : மலையில் இருந்து குதித்த காதல்ஜோடி ...பதறவைக்கும் வீடியோ

திருவண்ணாமலையில் ,இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தராததால், காதல் ஜோடி, மலையில் இருந்து  குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம். ஆம்பூரை சேர்ந்தவர் நீலாம்பரி.அதே மாவட்டம் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர்கள் இருவரும் சில வருடங்கள் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, வீட்டாரிடமும் இதுகுறித்துக் கேட்டுள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோரும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
 
அதனால் மனமுடைந்த நீலாம்பரி மற்றும் அருண்குமார், இன்று போளூர் சம்பத்கிரி மலையில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்ய திட்டமிட்டு முயன்றுள்ளனர். பின்னர், இருவரையும் பொதுமக்கள் சிறு காயங்களுடன் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.