சொந்த வீட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் – சுப்ரமண்யபுரம் பாணியில் வீட்டைப் பூட்டி மடக்கிய மாமனார் !

Last Modified திங்கள், 9 செப்டம்பர் 2019 (13:21 IST)
புதுக்கோட்டையில் தங்கள் சொந்த வீட்டில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகளைக் ஆதாரத்தோடு கைப்பற்ற மாமனார் வீட்டைப் பூட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சுலோச்சனா. இவர் கணவர் வெளிநாடு சென்று விட்டதால் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் மேல் கொண்ட பாசத்தால் வெளிநாட்டில் தான் சம்பாதிக்கும் எல்லாப் பணத்தையும் கணவர் இவர் பேருக்கே அனுப்பி வைத்துள்ளார். மேலும் இவருக்காக எல்லா வசதிகளும் கொண்ட ஒரு தனி வீடும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

கணவர் வழங்கிய எல்லா வசதிகளையும் அனுபவித்து வந்த சுலோச்சனாவோ அந்தப் பகுதியில் வசிக்கும் வேறு ஒரு இளைஞருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த செய்தி அரசல் புரசலாக அவரது மாமனாரின் காதுகளுக்கு செல்ல, சுலோச்சனாவின் வீட்டுக்கு சென்றுள்ளார் அவர். அப்போது அவர் தன் காதலனுடன் உள்ளே இருப்பதை உறுதி செய்துகொண்டு வெளிக்கதவைப் பூட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சுலோச்சனா பின் வாசல் வழியாக வெளியேறி தப்பியுள்ளார். இதையடுத்து சுலோச்சனா மீது காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :