செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 18 ஜனவரி 2020 (09:43 IST)

ரயிலில் கைவிரல் துண்டான பெண் – முதலுதவிக் கூட கிடைக்காமல் தவிப்பு !

சென்னையில் இருந்து ரயிலில் சென்ற பெண் ஒருவருக்கு ஜன்னல் கதவு மோதி கைவிரல் துண்டான சம்பவம் நடந்துள்ளது.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் பொங்கல் விடுமுறையை தனது தாய் வீட்டில் கொண்டாட மயிலாடுதுறையில் இருக்கும் ரயிலில் சென்றுள்ளார். அப்போது ரயில் மேடவாக்கத்தைத் தாண்டிய போது திடீரன ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஜன்னல் வேகமாக மூடியுள்ளது.

அப்போது ஜன்னலோரம் கையை வைத்திருந்த சரண்யாவின் கைவிரல் மேல் மோதி விரல்  துண்டாகியுள்ளது. இதனால் வலியில் சரண்யா அலற பயணிகள் டி டி ஆரை தொடர்பு கொண்டு முதலுதவி செய்ய சொல்லியுள்ளனர்.

ஆனால் டி டி ஆரிடம் முதலுதவிப் பெட்டியில் சாதனங்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் சரண்யா அடுத்த ஸ்டேஷனில் இறக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுள்ளார். இந்த சம்பவத்தால் ரயிலில் பதற்றமான சூழ்நிலை உருவானது.