செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜூன் 2021 (11:52 IST)

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் 8 ஆவது மாடியில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமிதா என்ற அந்த 41 வயது பெண் மே 21 ஆம் தேதி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்துள்ளது. இந்நிலையில் மே 23 ஆம் தேதி அவரைக் காணவில்லை. இது சம்மந்தமாக அவர் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அவர்களுக்கும் சுமிதா எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.

இதன் பின்னர் அவர் மே 31 ஆம் தேதி பூக்கடை காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து சுமிதா மருத்துவமனையின் 8 ஆவது மாடியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் எப்படி 8 ஆவது மாடிக்கு சென்றிருப்பார் என்ற கோணத்தில் இப்போது விசாரணை நடந்து வருகிறது.