செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (16:04 IST)

பானிபூரி சாப்பிட்ட பெண் பலி

ஈரோடு சூரம்பட்டி காந்திநகர் பகுதியில் பானிபூரி சாப்பிட்ட பெண் ஒருவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
ஈரோடு சூரம்பட்டி காந்திநகர் என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் ரோகிணிதேவி (34). இரண்டு தினங்களுக்கு முன்பாக கடையில் வாங்கி வந்த பானிபூரியை ரோகிணி தேவி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட உடனே அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்த அவர் படுத்து உறங்கியுள்ளார். 
 
மறுநாளுக்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால் மேற் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரோகிணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
பானிபூரி சாப்பிட்டு பெண் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் சோகத்தை அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளார். சம்மந்தப்பட்ட பானிபூரி கடையை போலீஸார் மூடினர்.