ஜெயலலிதா வேறு வார்டுக்கு மாற்றம்: டாக்டர்கள் திட்டம்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 1 நவம்பர் 2016 (10:59 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை சாதாரண வார்டுக்கு மாற்ற டாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

 
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் உள்ளதாக அவ்வப்போது மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரை 10 நாட்களில் தீவிர சிக்கிசை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
மேலும் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் இருப்பதால் செயற்கை சுவாசம் முறையில் உள்ள தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாயை அகற்றிவிட்டு, இயற்கையாக சுவாசிக்க வைத்துவிடலாம் என்று தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :