1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. wimco nagar metro train stopped temporarily

விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

விம்கோநகர்
சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் வரை செல்லும் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
 விம்கோ நகர் மற்றும் விமோ நகர் பனிமனை மெட்ரோ ரயில் நிலங்களுக்கு இடையே ஏற்பட்ட மின்விநியோக கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இதனால் இந்த வழித்தடத்தில் ஒருவழிப்பாதையில் 18 நிமிட இடைவேளையில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 
 
இன்னும் ஒரு சில மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ரயில்கள் சீராக இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கருக்கலைப்புக்கு அனுமதி வழங்க தனி வாரியம் அமைப்பு: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு..!