1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (16:37 IST)

நாளை முதல் கட்டணம் தள்ளுபடி: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவைகளை பயன்படுத்த பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் நாளை முதல் அதாவது ஜூன் 7-ம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகள் பயண அட்டையை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயில் பயணம் செய்யலாம் என்றும் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும் போது வாகன கட்டணம் தள்ளுபடி செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மாதாந்திர வாகன நிறுத்தம் அட்டையை பொறுத்தவரை கடந்த 30 நாட்களில் பயணிகள் மெட்ரோ ரயிலில் மேற்கொண்ட பயணங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. 
 
இந்த கட்டணம்  தள்ளுபடி குறித்த மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் https://chennaimetrorail.org/parking-tariff/ என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 
Edited by Mahendran