அமமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் விஐபி? பரபரப்பு தகவல்

VM| Last Updated: வியாழன், 14 மார்ச் 2019 (20:04 IST)
தேனி நாடாளுமன்ற தொகுதியில்  சார்பில்  விவேக் ஜெயராமன் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலாவின் தம்பி ஜெயராமனின் மனைவி இளவரசி, சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு வருடச் சிறைத்தண்டனை பெற்று சசிகலாவுடன் பரப்பன அஹ்ரகார சிறையில் உள்ளார். இவரது மகன் விவேக் ஜெயராமன்  தற்போது ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.

இவர் தான் தேனி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.  இது தொடர்பாக பிரபல வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவலின் படி,  சசிகலாவும் சீட் ஒதுக்க உத்தரவிட்டுள்ளதால், தேனி தொகுதியை விவேக்குக்கு ஒதுக்க தினகரன் முடிவெடுத்துள்ளதாக அமமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளாராம்.
 
தேனியில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத் நின்றாலும், விவேக் ஜெயராமன் போட்டியிட்டால் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :