ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (12:41 IST)

ஞாயிறு தீபாவளி என்பதால் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கலாமா..? தமிழ்நாடு அரசு ஆலோசனை

Holiday
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதற்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கலாமா என தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த ஆண்டு தீபாவளி தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால்  அரசு மற்றும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்பவர்கள் மறுநாள் திங்கட்கிழமை வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அன்று மாலையே ஊரிலிருந்து கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து திங்கட்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினம் என்பதால் மறுநாள் திங்கட்கிழமையை விடுமுறை தினமாக அறிவிக்கலாமா என தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
திங்கட்கிழமை விடுமுறை தினம் என்ற அறிவிப்பு வெளியானால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran