முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்: கடைசி நேரத்தில் கட் செய்த மனைவி

Last Modified செவ்வாய், 12 மார்ச் 2019 (13:20 IST)
முதல் மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்யவிருந்த கணவனின் வரவேற்பு நிகழ்ச்சியை முதல் மனைவி தடுத்து நிறுத்தினார்.
 
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை இருக்கும் நிலையில், அவர் கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த பத்மப்பிரியா என்ற பெண்ணை 20 நாட்களுக்கு முன்னர் 2வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் வரவேற்பு கரூரில் நடைபெற்றது.
 
இந்நிலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற முத்ல மனைவி தனக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துச்சொன்னார். இதனால் வரவேற்பு நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீஸார் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :