போலீஸ்காரருடன் என்ன தொடர்பு? போட்டுடைத்த தாடிபாலாஜியின் மனைவி

balaji
Last Modified வெள்ளி, 8 மார்ச் 2019 (08:19 IST)
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவரான தாடி பாலாஜி குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. 
 
தங்கள் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பாலாஜியும் மனைவி நித்யாவும் வெளிப்படையாக ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றங்களை சுமத்தி வருகின்றனர்.
 
அந்தவகையில் தற்போது மீண்டும் நடிகர் தாடி பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் தன் மனைவி நித்யா மீது தடாலடியாக குற்றத்தை சுமத்தியுள்ளார். அதாவது, தமது மனைவி நித்யா காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் என்பவருடன் சேர்ந்துகொண்டு குழந்தையின் வாழ்க்கையை சீரழிப்பதாகவும்,  மனோஜ் மீது போலீசில் புகார் கொடுத்ததன் பேரில் மனோஜ்குமார் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
மனோஜ்குமாருக்கு இந்த தண்டனை எல்லாம் போதாது. என் குடும்பத்தை சீரழித்த  அவர்மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நித்யா, என்னை காவல் உதவி ஆய்வாளர் மனோஜுடன் அறிமுகப்படுத்தியதே பாலாஜிதான். எங்கள் குடும்ப பிரச்சனையை தீர்க்க வந்த அவரையே என்னுடன் இணைத்து பேசி கொச்சைப்படுத்திவிட்டார். 
 
நேரடியாக பிரச்சனையை சமாளிக்க திராணி இல்லாமல் இப்படி வாய்க்கு வந்தமாதிரி பேசிக்கொண்டிருக்கிறார் என நித்யா கூறியிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :