ஃபுல் மப்பில் மணமகன்: ஆக்‌ஷனில் இறங்கிய மணமகள் வீட்டார்!!!

groom
Last Modified திங்கள், 11 மார்ச் 2019 (13:12 IST)
பீகாரில் மணமகன் திருமணத்திற்கு குடித்துவிட்டு வந்ததால் மணமகள் வீட்டார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
 
பீகார் மாநிலம் சாப்ரா பகுதியில் நபர் ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. சொந்த பந்தங்கள் அனைவரும் திருமண வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.
 
இதற்கிடையே மணமேடைக்கு புல் போதையுடன் மணமேடைக்கு வந்தார். இதனால் மணமகள் வீட்டார் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். போதையில் இருந்த மணமகன் தான் ஒரு குடிகாரன் என உளறினார்.
 
இதனால் உடனடியாக கல்யாணம் நிறுத்தப்பட்டது. மணமகள் வீடார் தாங்கள் எடுத்துவந்த சீதனத்தை எடுத்துக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர்.


இதில் மேலும் படிக்கவும் :