வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (08:28 IST)

வீடியோ காலில் பேசிய கணவன் திடீரென தீப்பற்றி எரிந்த கொடூரம் – சூடான் தீ விபத்து !

கடலூரில் இருந்து சூடானில் வேலைப்பார்த்து வந்த ராஜசேகர் என்பவர் தீ விபத்தில் சிக்கி இறந்தபோது மனைவியுடன் வீடியோ காலில் பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பன்ரூட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரின் மனைவி கலை சுந்தரி. இவர்களுக்கு சிவானி என்ற மகள் உள்ளார். குடும்ப வறுமை சூழல் காரணமாக ராஜசேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூடானில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அவர் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஊருக்கு திரும்பி வர இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் வேலைப்பார்த்து வந்த தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி கலை சுந்தரி விபத்தில் இறப்பதற்கு முன் தன் கணவர் தன்னோடு வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது திடிரென அலறல் சத்தம் கேட்க அந்த பகுதியில் தீப் பரவ கால் கட் ஆனது என மனைவி கண்ணீரோடு சொல்லியுள்ளார்.