1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 பிப்ரவரி 2018 (15:00 IST)

கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி: திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கல்லால் தாக்கி கொன்ற மனைவி கைது.
 
திருவண்ணாமலை அருகே உள்ள மருத்துவாம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். அவரது மனைவி தீபா, இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 
 
வீட்டின் குடுமப சூழ்நிலை சரியில்லாத காரணத்தினால் தீபா, திருவண்ணாமலையில் உள்ள கணினி மையத்தில் வேலை செய்து வந்தார். அப்போது தீபாவிக்கும், பிரபு என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் அந்த தொடர்பு கள்ளக் காதலாக மாறியது. .
 
தீபாவின் கள்ளக்காதல் விவரம் சரேஷீக்கு ஓருநாள் தெரியவந்தது, இதனால் மனைவியை எச்சரித்தார். அதனால் கோபமடைந்த தீபா, பிரபுவுடன் சேர்ந்து தன் கணவனை கொல்ல தீட்டம் போட்டாள்.
 
அதன்படி தீபா தன் கணவனை தனியாக வெளியே அழைத்து சென்றாள். அங்கு தன் கள்ளக்காதலன் பிரபுவுடன் சேர்ந்து கல்லை தூக்கி சுரேஷின் தலையில் போட்டு அவரை சாகடித்தனர். பிறகு உறவினர்களுக்கு போன் செய்து கணவரை மர்ம நபர்கள் கொன்றுவிட்டதாக கூறினார்.
 
இந்த சம்பவம் குறித்து, போலீசார் நடத்திய விசாரனையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சுரேஷை அவரது மனைவி கொன்ற தகவல் போலிசார்க்கு தெரியவந்தது. பின்பு போலீசார் தீபா, பிரபு இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.